×

கம்பத்தில் ஆலோசனைக் கூட்டம்

 

கம்பம், ஜூன் 24: கம்பத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் நகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கம்பம் மக்கா பள்ளிவாசலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது தலைமை வகித்தார். மாநில செயலாளர் யாசர் அராபத் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் கம்பம் நகரத்தில் முன் எடுக்க வேண்டிய பணிகள்,எதிர் கால செயல் திட்டங்கள், மருத்துவ முகாம் மற்றும் தொடர் நிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் சிட்டி சாகுல், பெரியகுளம் அல் அக்ஸா பள்ளிவாசல் துணை தலைவர் சமீர் யாசிக், ஹிதாயத்துல்லாஹ், மூஸா மற்றும் கம்பம் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கம்பத்தில் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pole ,Dawheed Jamat ,Dinakaran ,
× RELATED வானில் வர்ணஜாலம்.. வட துருவத்தில் தோன்றிய ஒளிவெள்ளம்!!